’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Recent Posts
Popular Posts
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேம...
-
வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன். கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே ! மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே ! தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தே...
-
உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும் உம் அன்...
-
அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும் திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர். இதயத்தில...
Blog Archive
-
▼
2016
(350)
-
▼
November
(10)
- கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவு...
- ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...
- சவுல் பவுலாக மாறிய சரித்திரம்
- 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONA...
- வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
- தமிழ் உலகின் பழமையான மொழி
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்
- புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...
- பாஸ்வேர்ட் திருடர்கள் ?
-
▼
November
(10)
0 comments:
Post a Comment