அடுத்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக உள்ளவர் ஹாங்க் கிரேலி.
இவர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தையை உருவாக்கும் முறை மற்றும் உயிரின் உருவாக்கம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தனது பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தம்பதிகள் தங்கள் டிஎன்ஏ-வை வைத்து ஆய்வகங்களில் கருவை வடிவமைக்கும் முறை இன்னும் முப்பது ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி விடும் என்றார்.
பெண்ணின்
தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம் என்றும், அதன்மூலமாக இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம் எனவும், பின் அந்த முட்டைகள் மூலமாக ஆணின் ஸ்டெம் செல்களை சேர்த்து குழந்தையை உருவாக்கலாம் என்றும் கிரேலி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை தாங்களே டிசைன் செய்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த முறை தற்போதே சாத்தியம் என்று கூறிய அவர், இன்னும் 30 ஆண்டுகளில் இந்த முறையை மிகவும் குறைந்த விலையில், உயர்ரக தொழில்நுட்பத்தில் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு பின் குழந்தைக்காக உடலுறவு கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமில்லை என்றும் ஆராய்ச்சியாளர் ஹாங்க் கிரேலி தெரிவித்துள்ளார்.
Recent Posts
Popular Posts
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேம...
-
வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன். கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே ! மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே ! தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தே...
-
உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும் உம் அன்...
-
அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும் திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர். இதயத்தில...
Blog Archive
-
▼
2017
(78)
-
▼
July
(14)
- கடவுள்கள் யார்? மறைக்கப்படும் இரகசியங்கள்
- பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளிய...
- புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் ...
- ஜூலியின் மூக்கை உடைத்த விஜய் டிவி: அந்த 5 நொடி வீட...
- உலக முஸ்லிம்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் ???
- ரோல் செய்வது எப்படி
- அரசியல் தீர்வு பாதிக்கப்படலாம்! – விக்னேஸ்வரன்
- தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்ட...
- ஆண்மைக்குறைபாட்டை குணப்பபடுத்த
- உருளைக்கிழங்கு செடி மீது தக்காளி ஓட்டுதல்
- பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை!
- தமிழ்த் தேசியத்திற்கு பேரிழப்பு ஓவியர் சந்தானம் அவ...
- சர்வ மத பிராத்தனை கிஸ்தவர்களுக்கு உகந்ததா ?
- குழந்தை பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்
-
▼
July
(14)
0 comments:
Post a Comment