வேற்று கிரகவாசிகளும் நம்மைபோன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஞ்ஞானிகள் Gliese 832c என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களை நாம் தொடர்பு கொண்டால், நமக்குத் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், நிச்சயமாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து நமக்கு சிக்னல் வரும்.
ஆனால் நாம் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதில் தான் சாமர்த்தியம். வேற்றுகிரகவாசிகள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள், அதனால் அவர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனமாக இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய அழிவை தவிர்க்க முடியும்.அவர்களும் நம்மைப் போன்று தான் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்தவே முயல்வார்கள், அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம்.
ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recent Posts
Popular Posts
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேம...
-
வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன். கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே ! மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே ! தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தே...
-
உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும் உம் அன்...
-
அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும் திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர். இதயத்தில...
0 comments:
Post a Comment